

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முகக்கவசம் அணியாத 905 பேரிடமிருந்து ரூ.1.81 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 461 பேர், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 26, திருச்செந்தூர் 195, வைகுண்டம் 74, மணியாச்சி 25, கோவில்பட்டி 14, விளாத்தி குளம் 68 மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 42 பேர் என மொத்தம் 905 பேரிடம் ரூ.1.81 லட்சம் அபராதம் வசூலிக் கப்பட்டது.
இதுபோல், சமூக இடை வெளியை கடை பிடிக்காத 16 பேரிடம் ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.