

'மண்டேலா' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என, ஆதி மருத்துவர் இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
‘மண்டேலா’ திரைப்படம் முடி திருத்தும் மருத்துவத் தொழிலாளியை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆதி மருத்துவர் இயக்கத்தினர் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் முடி திருத்தும் மருத்துவர் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ‘மண்டேலா’ படத்தில், முடி திருத்தும் மருத்துவத் தொழிலாளியை இழிவுபடுத்தும் வகையில், பல்வேறு காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சிகள் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. எனவே ’மண்டேலா’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும். தடை விதிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.