

சுற்றுலாத்துறை சார்பில் முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில், அந்த நகரின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் வகையில் ‘செல்பி பாயிண்ட்’கள் அமைக்கப் பட்டுள்ளன.
சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு ஹோட் டல்களுக்கு கடந்த காலத்தில் பொதுமக்களிடையே பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு சுற்றுலாத் துறை போதிய நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து தமிழ்நாடு ஹோட்டல்களையும் தனியார் ஹோட்டல்களுக்கு நிக ராக புணரமைத்தது.
மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் வளாகமும், திரு மண நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ப புதுப்பொலிவுபடுத்தப்பட்டன. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உயர்தர சமையல் கலைஞர்களை கொண்டு விருந்து உணவு தயாரிக்க ஹோட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்து தருகிறது. கட்டணமும் குறைவு என்பதால் தமிழ்நாடு ஹோட்டலில் தனியார் ஹோட்டல்களுக்கு இணையாக தற்போது நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கி உள்ளன.
இரவு நேரங்களில் ரிசார்ட்களை போல் தமிழ்நாடு ஹோட்டல் அலங்கரிக்கப்பட்டு, அதன் வளாகத்தில் திறந்த வெளியில் காற்றோட்டமாக அமர்ந்து கொண்டு மெகா சைஸ் டிவிகளை பார்த்துக் கொண்டே சுற்றுலாப்பயணிகள் சாப்பிடுவதற்கு வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர தற்போது நுழைவாயில் பகுதியில் ‘செல்பி பாயிண்ட்’ அமைக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் தங்குவதற்கும், சாப்பிடவும் வரும் சுற்றுலாப் ப யணிகள், அரங்குகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பொதுமக்கள் ஆர்வமாக இந்த செல்பி பாயிண்ட்டில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் அதன் பாரம்பரிய அடையாளத்துடன் ‘செல்பி பாயிண் ட்’டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் ‘செல்பி பாயிண்ட்’டில் மதுரையின் பாரம்பரிய அடையாளமான மீனாட்சியம்மன் கோயில் புதுமண்டபம், ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளன.