தி.மலை அண்ணாமலையார் கோயிலில் - டிடிவி தினகரன் மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு :

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் -  டிடிவி தினகரன் மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு :
Updated on
1 min read

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் மற்றும் தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்பி துளசி வாண்டையார் பேரனுமான ராமநாதன் துளசிக்கும் கடந் தாண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதிதிருமண நிச்சயம் செய்யப்பட்டது.

இவர்களது திருமணம், தி.மலை அண்ணாமலையார் கோயிலில் வரும் ஜுன் மாதம் 13-ம் தேதி சசிகலா நடராஜன் முன்னிலையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், தி.மலை அண்ணாமலையார் கோயிலில் டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள், கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்தை பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in