சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் :

சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, குமாரபாளையம் கல்லாங்காட்டுவலசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, குமாரபாளையம் கல்லாங்காட்டுவலசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
Updated on
1 min read

சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, குமாரபாளையம் அடுத்த கல்லாங்காட்டுவலசில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனங்கூரில்...

ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கர் வழியில் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், சாதி, மதம், பெண்ணடிமைத்தனம் இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அரக்கோணத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குமாரபாளையத்தில் பாலியல் துன்பத்துக்கு ஆளான சிறுமிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in