வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையை சமாளிக்க - 2 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய வார்டுகள் தயார் : கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கவும் ஏற்பாடு

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையை சமாளிக்க -  2 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய வார்டுகள் தயார் :  கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கவும் ஏற்பாடு
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் 2 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனாதொற்று பரவல் வேகமாக பரவி வரும் நிலையில், மாவட்டத்தில் நேற்று 101 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி உடனடியாக பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக படுக்கை வசதி களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனை, சி.எம்.சி மருத்துவமனை, நறுவீ, புரம் நாராயணி உள்ளிட்ட மருத்துவமனைகளில் மீண்டும் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு வருகிறது. தற்போது, 2 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர ஏற்கெனவே விஜடி பல்கலைக்கழகம் மற்றும் குடியாத்தம் சென்றாம்பள்ளி அருகேயுள்ள அபிராமி கல்லூரி ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு சிகிச்சை மையங்களாக இயங்கின. கரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த மையங்கள் மூடப்பட்டன.

விஐடியில் 500 படுக்கை வசதிகள்

தேவைப்படும் நேரத்தில் இந்த வார்டை பயன்படுத்த உள்ளனர். அபிராமி கல்லூரியில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டை தயார் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன.

இதுதவிர வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் செயல்பட உள்ளதால் மே 2-ம் தேதிக்குப் பிறகு இந்த மையங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in