காஞ்சி மாவட்டத்தில் 40,650 பேருக்கு கரோனா தடுப்பூசி :

காஞ்சி மாவட்டத்தில் 40,650 பேருக்கு கரோனா தடுப்பூசி :
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எல்.சுப்பிரமணியன் தலைமைவகித்தார்.

இதில், மாவட்ட ஆட்சியர்மகேஸ்வரி பேசும்போது, "கரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகள் அதிகரிக்கப்பட் டுள்ளன. 40,650 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 6 இடங்களில் 1,780 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன" என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல் வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in