

மத்தூரில் பிளஸ் 1 மாணவியை கடத்திய அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவியை காணவில்லை. இதுதொடர்பான புகாரின்பேரில், மத்தூர் போலீ ஸார் விசாரணை நடத் தினர். விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் நாகனூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக தற்காலிகமாக பணிபுரியும் சரண்ராஜ் (31) என்பவர் மாணவியை கடத்திச் சென்றது தெரிய வந்தது.செங்கம் வட்டம் புதிய குயிலம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியருக்கு ஏற்கெனவே 3 திருமணங்கள் நடந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, மாணவியை மீட்ட போலீஸார் ஆசிரியரை கைது செய்தனர்.