

சூளகிரி அருகே கார் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் மேலுமலை அடுத்த இம்மிடிநாயக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்சின்ன மாரப்பா (60). விவசாயியான இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இம்மிடிநாயக் கனப்பள்ளி பேருந்து நிறுத்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.