இணையவழி கருத்தரங்கம் :

இணையவழி கருத்தரங்கம் :
Updated on
1 min read

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் நிழல் இல்லா நாட்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட கிளை சார்பில் மாவட்டத் தலைவர் அமுதா மற்றும் துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய கருத்தரங்கம் பிற்பகல் 1 மணியளவில் முடிவடைந்தது. புதுடெல்லி விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், மாநில கருத்தாளர் தேன்மொழி செல்வி ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு தமிழகத்தில் நிழல் இல்லா நாட்கள் குறித்து விரிவாக பேசினர்.

இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் தினகரன், மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் ஜீவானந்தம், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் பூபாலன் உட்பட 37 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in