திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஒத்திவைப்பு :

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஒத்திவைப்பு :
Updated on
1 min read

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மற்றும் தேரோட்டம் கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை.

இதையடுத்து, நிகழாண்டு நேற்று முன்தினம் சித்திரை திருவிழா தொடங்கி, ஏப்.23-ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால், கோயில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் சித்திரை திருவிழா தொடங்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஏப்.23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டமும் ஒத்திவைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in