

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரியகுஞ்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (36). இவரது மனைவி நித்யா (30). கடந்த 6-ம் தேதி, நித்யாவுடன், சரவணன் இருசக்கர வாகனத்தில் சிங்காரப்பேட்டை - திருப்பத்தூர் சாலையில் சின்னதள்ளப்பாடி கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென நிலைதடுமாறி 2 பேரும் சாலையில் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த நித்யா சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனில்லாமல் நேற்று முன்தினம் நித்யா உயிரிழந்தார்.
இதுதொடர்பாக சிங்காரப் பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.