Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

பணப்புழக்கம் அதிகரித்தவுடன் என்டிசி பஞ்சாலைகள் இயக்கப்படும் : மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே.சண்முக சுந்தரத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தேசிய பஞ்சாலை கழகத்துக்குச் (என்டிசி) சொந்தமான பஞ்சாலைகளையும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதம் அனுப்பி இருந்தீர்கள். கரோனா பாதிப்பு காரணமாக 2020 ஏப்ரல்முதல் செப்டம்பர் வரை நூலின்தேவை குறைந்ததால் தற்காலிகமாக என்டிசி பஞ்சாலைகள் மூடப்பட்டன. போதிய பணம் இருப்பில் இல்லாவிட்டாலும், பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டுவந்தது.

தற்போது நாடு முழுவதும் 13பஞ்சாலைகள் மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளன. இந்த பஞ்சாலைகளின் இயங்குதிறன் மூலம் போதுமான அளவு பணப்புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு போதிய பணப்புழக்கம் அதிகரித்தவுடன், எஞ்சியுள்ள பஞ்சாலைகள் படிப்படியாக இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x