

மது போதையில் நண்பர்களுக் கிடையே ஏற்பட்ட தகராறில், அலங்கியத்தை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
அலங்கியம் காங்கயம் பாளை யத்தைச் சேர்ந்தவர் ஜான் (60). பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி(50). நண்பர்களான இருவரும், அப்பகுதியிலுள்ள மதுக்கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர். மது அருந்திக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட வாய் தகராறில்,மது பாட்டிலால் ஜானை தாக்கியுள்ளார் சங்கிலி. படுகாயமடைந்த ஜானை, அங்கிருந்தவர்கள் மீட்டு அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை ஜான் உயிரிழந்தார். இதுதொடர்பாக சங்கிலி மீது கொலை வழக்கு பதிந்து அலங்கியம் போலீஸார் விசாரிக்கின்றனர்.