

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நாளை (10-ம் தேதி) லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்றம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், நாளை (10-ம் தேதி) நேஷனல் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் கலைமதி தலைமையில் நடைபெறவுள்ளது.
எனவே வழக்காடிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்கு கள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள சில பரஸ்பரம் பேசி முடித்துக்கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றைய தினமே தீர்வுகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, வழக்கறிஞர் களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக சமரசமாக முடித்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.