Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

புதுவையில் தேர்தலுக்கு முன்பு - வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகித்தவர்கள் மீது வழக்குப்பதிவு :

புதுச்சேரியில் தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி உப்பளம் தொகுதிதேர்தல் பறக்கும்படை பொறுப்புஅதிகாரி ஜம்புலிங்கம் தலைமையிலான குழுவினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந் தனர். கடந்த 3-ம் தேதி, உப்பளம் தொகு திக்குட்பட்ட தாவீசுபேட்டை நகராட்சி குடியிருப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு நான்ஸ்டிக் தவா (தோசை கற்கள்) விநியோ கம் செய்யப்படுவதாக புகார் வந்தது.இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சென்றனர்.

அப்போது நான்ஸ்டிக் தவாவு டன் நின்றிருந்த ஒரு கும்பல் பறக்கும் படையினரை கண்டதும் அவற்றை வீசிவிட்டு தப்பியோடியது. இதைத்தொடர்ந்து 24 நான்ஸ்டிக் தவாக்களை பறிமுதல் செய்துஒதியஞ்சாலை காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் நேற்று முன்தினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நான்ஸ்டிக் தவாக்களை வீசிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் தேர்தல் பறக்கும் படை அதிகாரி எழில்ராஜன் தலை மையில் உப்பளம் அம்பேத்கர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனைசெய்ததில் அவரது சட்டைப் பையில் ரூ.16 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. விசார ணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் (42) என்பதும், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அவரிடமிருந்த ரூ.16 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி முத்துசாமி தலைமையிலான குழுவினர் கடந்த 5-ம் தேதி குயவர்பாளையம் டி.ஆர். நகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்றிருந்த 3 பேர் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் வைத்திருந்த ரூ.27,500 பணத்தை ரோட்டில் வீசிவிட்டு தப்பியோடினர். அந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் மணவெளி தொகுதி தேர்தல் அதிகாரி உமாசங்கர் தலைமையிலான பறக்கும்படையினர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்ன வீராம்பட் டினம் ரோடு ஓடைவெளி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதவராக வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்த ஓடைவெளியைச் சேர்ந்த ஆனந்தன் (41) என்பவரை மடக்கி பிடித்தனர்.

அவரிடம் இருந்து 200 டோக்கன்கள் மற்றும் மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸார் வழக் குப்பதிவு செய் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x