கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் 243 பேர் பாதுகாப்பு :

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் 243 பேர் பாதுகாப்பு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் வருவாய்த்துறை, காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் என 243 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதாக ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத் தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தினை கண்காணிக்க ஏதுவாக 70 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 12 தொலைக்காட்சிகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையத்திற்கு ஒரு ஷிப்ட்க்கு ஒரு வட்டாட்சியர் மற்றும் துணை ராணுவத்தினர், காவல் துறையினர் 80 நபர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 3 முறை என மொத்தம் 243 நபர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in