

ஊத்தங்கரை அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டிருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் (50). இவர், தனது நிலத்தில், சொந்த பயன் பாட்டிற்காக கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணிற்கு புகார் வந்தது.
இதையடுத்து தோட்டத்தில் ஆய்வு செய்து, கஞ்சா செடி பயரிட்டுள்ளதை ஊத்தங்கரை போலீஸார் உறுதி செய்தனர்.
நேற்று அதிகாலை ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீஸார், வெங்கடாசலத்தை கைது செய்து, தோட்டத்தில் பயிரிட்டிருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.