Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

சேலம், நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு - 1.28 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி விநியோகம் :

சேலம்

சேலம், நாமக்கல் உள்ளிட்ட 6 சுகாதார மாவட்டங்களுக்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 300 டோஸ் கரோனா தடுப்பூசி சேலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக, கரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்திய மத்திய சுகாதாரத் துறை, முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுத்தது.தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படியாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

சேலம் சுகாதார மாவட்டத்துக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் வகை தடுப்பூசிகள் மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 800 டோஸ் வழங்கப்பட்டன. இதில், முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் என 2 லட்சத்து 8 ஆயிரத்து 641 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம், ஆத்தூர், நாமக்கல் உள்ளிட்ட 6 சுகாதார மாவட்டங்களுக்கு தற்போது மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 300 டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு,அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.இதில் கோவிஷீல்டு தடுப்பூசி, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 800 டோஸ் வந்துள்ளன. இதில், சுகாதார மாவட்டங்களான சேலத்துக்கு 29 ஆயிரத்து 100 டோஸ், ஆத்தூருக்கு 18 ஆயிரத்து 100, தருமபுரிக்கு 5 ஆயிரத்து 300, கிருஷ்ணகிரிக்கு 8 ஆயிரத்து 700 டோஸ், நாமக்கல் லுக்கு 12 ஆயிரத்து 600, கூடுதல் தேவைக்குப் பயன்படுத்த 30 ஆயிரம்டோஸ் என அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல, கோவேக்சின் தடுப்பூசி 24 ஆயிரத்து 500 டோஸ் வந்துள்ளன. அதில், சுகாதார மாவட்டங்களான சேலத்துக்கு 15 ஆயிரம் டோஸ், தருமபுரிக்கு 2 ஆயிரம், கிருஷ்ணகிரிக்கு 3 ஆயிரம், நாமக்கல்லுக்கு 4 ஆயிரத்து 500 டோஸ் என அந்த மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x