

தூத்துக்குடி அருகே சவேரியார் புரத்தில் உள்ள தூய சவேரியார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இரட்டை கோபுரத்தை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தூ.சவேரியார்புரத்தில் அமைந் துள்ள தூய சவேரியார் ஆலயத்தில் சவேரியாரின் 515-வது பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் அசன விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி இரட்டை கோபுரத்தை திறந்துவைத்து அர்ச்சித்தார். தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், அசன விருந்தும் நடைபெற்றது. இதில் மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன், அருட்தந்தையர்கள் ஸ்டாலின், ஜஸ்டின்,கிங்ஸ்டன், வினித் ராஜா, அருட்சகோதரிகள், ஊர் நிர்வாகிகள், அனைத்து அன்பியங்கள் நிர்வாகிகள் மற்றும் இறைமக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேசு நசரேன் மற்றும் ஊர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.