Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

தனுஷ்கோடியில் அரசு பஸ் விபத்தில் பெண் காயம் : நடத்துநர் ஓட்டியதே காரணம் என புகார்

ராமேசுவரம் அருகே தனுஷ் கோடியில் அரசு நகரப் பேருந்தை நடத்துநர் இயக்கியதால் விபத்துக்குள்ளாகி மீனவர் ஒருவர் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை அரிச்சல்முனையில் இருந்து வந்த அரசுப் பேருந்தை நடத்துநர் உதயா என்பவர் இயக்கியுள்ளார். மீனவர்களோடு பேருந்து தனுஷ்கோடியில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மகாதேவி என்ற பெண் மீனவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சாலை யோரத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் சிலர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்த மகாதேவியை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பேருந்தில் இருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். ராமேசுவரம் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட மகாதேவி, மேல் சிகிக்சைக்காக ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் பேருந்தின் அடிப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டு, மேற்கொண்டு இயக்க முடியாத நிலையில் நின்றது. இதுகுறித்து தனுஷ்கோடி மீனவர்கள் கூறியதாவது:

அரிச்சல் முனையிலிருந்து பேருந்து ராமேசுவரம் செல்லும்போது ஓட்டுநர் பூமிநாதனுக்கு பதிலாக நடத்துநர் உதயா தான் பேருந்தை ஓட்டிச் செல்வார் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x