Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணியில் - 675 ராணுவ வீரர்கள், 1,469 காவலர்கள் : மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் பி.நாயர் தகவல்

நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங் களில் 675 ராணுவ வீரர்கள், 1,469 காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயி லாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,861 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இங்கு இன்று(ஏப்.6) காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு, வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரம், விவிபாட் இயந்திரம், வாக்காளர் பட்டியல் ஆகியவை உட்பட 35 வகையான பொருட்கள், அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செல்லும் வாகனத்துடன் ஒரு காவலரும், ஒரு தேர்தல் பணி அலுவலரும் சென்றனர்.

நாகை கோட்டாட்சியர் அலு வலகம், வேதாரண்யம், கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகங்கள் உட்பட அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் இருந்து, வாக்குச்சாவடி மையங் களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், நாகை ஆட்சியருமான பிரவீன் பி.நாயர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

நாகை கோட்டாட்சியர் அலு வலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

சீர்காழி தொகுதியில் 1,672 அலுவலர்கள், மயிலாடுதுறை தொகுதியில் 1,640 அலுவலர்கள், பூம்புகார் தொகுதியில் 1,840 அலுவலர்கள், நாகை தொகுதியில் 1,276 அலுவலர்கள், கீழ்வேளூர் தொகுதியில் 1,204 அலுவலர்கள், வேதாரண்யம் தொகுதியில் 1,300 அலுவலர்கள் என மொத்தம் 8,932 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.

நாகை மாவட்டத்துக்குட்பட்ட நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 தொகுதிகளுக்கு 68 மண்டல அலுவலர்கள், மயிலாடுதுறை மாவட்டத்துக்குட்பட்ட மயிலாடு துறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 தொகுதிகளுக்கு 88 மண்டல அலுவலர்கள் என மொத்தம் 156 மண்டல அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 6 தொகுதிகளிலும் சேர்த்து, 3 துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த 675 ராணுவ வீரர்கள் மற்றும் 1,469 காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x