Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

பிரதமர் படத்துடன் தலா 1 கிராம் தங்கக் காசு, ரூ.2,000 விநியோகம்? : திருநள்ளாறில் 149 தங்கக்காசுகள், பணம் பறிமுதல்

திருநள்ளாறு தொகுதியில் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடிபடத்துடன் தலா 1 கிராம் தங்கக் காசு, ரூ.2,000 விநியோகம் செய்யப் பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வரும் நிலையில், திருநள்ளாறில் பறக்கும் படையினரால் 149 தங்கக் காசுகள், ரூ.90,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்கால் மாவட்டம் திரு நள்ளாறு அருகே சொரக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு அஜித்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட் டிருந்தனர். அப்போது, அய்யனார் கோயில் தெருவில் இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்த சிலர், பறக்கும் படையினரைப் பார்த்தவுடன், இருசக்கர வாக னத்தை விட்டுவிட்டு தப்பியோடினர்.

இதையடுத்து, அந்த இருசக்கர வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது, வாகனத் தின் டேங்க் கவரில் 149 தங்கக் காசுகள், ரூ.90,500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இவற்றை பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என புகார் அளித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரல்

இதனிடையே, திருநள்ளாறு பகுதி வாக்காளர்களுக்கு, ஒரு சிறிய பாலித்தீன் கவரில், ஒரு பக்கம் பிரதமர் மோடியின் படம், மறுபக்கம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல் படங்கள் அச்சிடப்பட்ட துண்டுச் சீட்டு, ஒரு கிராம் தங்கக் காசு, ரூ.2,000 ரொக்கம் ஆகியவை வைக்கப்பட்டு, ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களிலும் தகவல் பரவி வருகிறது.

திருநள்ளாறு தொகுதியில், பாஜக சார்பில் தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சுயேச்சையாக முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இருசக்கர வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது, வாகனத்தின் டேங்க் கவரில் 149 தங்கக் காசுகள், ரூ.90,500 ரொக்கம் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x