ஜனநாயகத்தை காக்கும் தேர்தல் மார்க்சிஸ்ட் டி.கே.ரங்கராஜன் பேச்சு :

ஜனநாயகத்தை காக்கும்  தேர்தல் மார்க்சிஸ்ட் டி.கே.ரங்கராஜன் பேச்சு :
Updated on
1 min read

திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து, நகரில் நடந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களில் டி.கே.ரங்கராஜன் பேசியதாவது: இந்த தேர்தல் வாழ்வா, சாவா என்ற போராட்டம். திமுக வெற்றி பெறாவிட்டால் நமது ஜனநாயகத்துக்கு ஆபத்து. இந்த ஆபத்தை அன்றைக்கு ஜெயலலிதா புரிந்துகொண்டார். ஆனால் பழனிசாமி புரிந்துகொள்ளவில்லை. இந்த ஆபத்தை அவர் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்றால், அவருக்கு சொந்தக் கால் இல்லை. நாற்காலிக்கு உள்ள நான்கு கால்களில் ஒரு கால் இல்லை என்றால் சாய்ந்துவிடும் என்பது போல பழனிசாமி இரண்டு கால்களும், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இரண்டு கால்கள் ஆகும். யாரோ எழுதிக்கொடுப்பதை பிரதமர் பேசலாமா? இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. பாஜக ஆட்சியில் மாநில அரசு என்பது ஊராட்சியைப் போலத்தான் இருக்கும். முதல்வருக்கு மரியாதை இருக்காது. அரசுக்கான அதிகாரம் இருக்காது.

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. வேளாண் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in