பணப்பட்டுவாடாவால் மாற்றம் ஏற்படாது : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து :

பணப்பட்டுவாடாவால் மாற்றம் ஏற்படாது : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து :
Updated on
1 min read

இது குறித்து அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் போன்று திமுக தலைமையிலான கூட்டணி சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி பெறும். பாஜக இளம் தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா, தமிழகத்தில் இருந்து பெரியார் கொள்கையை அகற்றுவோம் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரது நிலைப்பாடு என்ன?.

எதிர்க்கட்சித் தலைவர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையால் பாஜகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். அரசு அதிகாரிகளின் உதவியோடு தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. இது குறித்து பலமுறை தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபோன்று பணப்பட்டுவாடா செய்வதால் தேர்தல் முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in