

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தமிழ்ப் பேரரசு கட்சி நிறுவனரும் திரைப்பட இயக்குநருமான கவுதமன் நேற்று தனது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தாருடன் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, நான் குன்னம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறேன். என்னை சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கினால், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்களின் உன்னதமான வாழ்வுக்காக பாடுபடுவேன் என்றார்.