

குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியம் பகுதி கீழூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளர் ஆயிபேட்டை டாக்டர். ஏபிஆர். பக்தரட்சகன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது ஒரு மூதாட்டி எங்கள் குறைகளை யாரும் கேட்கவில்லை தண்ணீர் வசதி, கழிவு நீர் வாய்க் கால், தெருவிளக்கு, சாலை வசதி போன்றவை சரியாக இல்லை என்று குறைகளை கூறினார். அந்த பாட்டி வீட்டிற்கு சென்று அவர் உங்களுக்கு நான் இருக்கிறேன். எந்த வித கவலையும் வேண்டாம். உங்கள் குறைகளை தீர்க்கவே உள்ளேன் என்று கூறினார். பின்னர் அவர் பேசியது:
தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப் படும். மக்கள் எந்த நேரத்திலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம், ஒப்பந்த தொழி லாளர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும்.
முந்திரி விவசாயிகளின் நலன்காக்கப்படும். கிராமபுற இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு உரு வாக்கித்தரப்படும். அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்கு டன் மக்களை சென் றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.