

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பயன் படுத்தப்பட உள்ள 236 வாகனங் கள் ஜிபிஎஸ் கருவிகள் பொருத் தப்பட்டு, தயார்நிலையில் உள் ளன என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ம.கோவிந்தராவ் தெரிவித்தார்.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி, தஞ்சாவூர் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருவதை நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியர் ம.கோவிந்தராவ், பின் னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்த லுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாகனங்கள் அனைத்திலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட் டத்தில் மொத்தம் 204 மண்டல குழுக்கள் உள்ளன. இவற்றுக்கு தேவையான 204 வாகனங்கள் மற்றும் கூடுதலாக 32 வாகனங்கள் என மொத்தம் 236 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப் பட்டு, தயார் நிலையில் உள்ளன.
இவற்றின் செயல்பாடுகள் ஜிபிஎஸ் கருவி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், சம் பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடைய அலுவலகத் திலும் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். வாகனம் செல்லும்போது, அது எந்தப் பகுதியில் உள்ளது என்பது கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.
தேர்தல் அதிகாரிகளின் வாகன சோதனையில் இதுவரை ரூ.1.44 கோடி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. மேலும், வாக்காளர் களுக்கு பணப் பட்டுவாடா செய் வது தொடர்பாக தகவல் கிடைக் கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது, தஞ்சா வூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன், ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.