

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் சார்பில் 2021-ம் ஆண்டு பொதுத் தேர்தல் பொதுக் கூட்டம் அண்மை யில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்விந்தர் சிங் பேசியபோது, “பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தின் கல்வித்தரம் உயர்வானது. 90 சதவீதம் படிப்பறிவு எட்டிய மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே, பிரதமர் மோடி சொல்லும் பொய்கள் மக்களிடம் எடுபடவில்லை. மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு விட்டுக்கொடுத்து விட்டது. எனவே, தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்” என்றார்.
இந்தக் கூட்டத்துக்கு, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமை வகித்தார்.