

தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மழலையர் பிரிவு மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கரோனாவை முன்னிட்டு கடந்த ஓராண்டாக இப்பள்ளியில் ஆன்லைன் மூலம் மாணவ, மாணவியருக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டு நிறைவு பெறுவதையடுத்து மழலையருக்கு ஆன்லைன் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி டிரஸ்டி ஜி.னிவாசன் தலைமை வகித்தார். டிசிடபிள்யூ மூத்த பொது மேலாளர் பி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன் வரவேற்றார்.
நந்தினி னிவாசன் மழலைகளுக்கு ஆன்லைன் மூலமாக பட்டங்களை வழங்கினார். பெற்றோர்கள் தங்களது கருத்துகளை ஆன்லைன் மூலமாகபகிர்ந்து கொண்டனர். துணை முதல்வர் எஸ்.அனுராதா ராஜா நன்றி கூறினார்.
விழாவில் தலைமை ஆசிரியர் இ.ஸ்டீபன் பாலாசீர், நிர்வாகி வி.மதன், மேலாளர் எஸ்.பாலமுருகன் போஸ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.