வீடுகளுக்கு 150 யூனிட் இலவச மின்சாரம் : குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் உறுதி

குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்விராமஜெயம் வாக்கு சேகரித்தார்.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்விராமஜெயம் வாக்கு சேகரித்தார்.
Updated on
1 min read

குறிஞ்சிபாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் நேற்று தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ஓட்டு கேட்டார்.

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை செல்வி ராமஜெயம் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து கேஎன் பேட்டை, கரையேறவிட்ட குப்பம்.எம் புதூர், மாவடிப் பாளையம், குறிஞ்சிநகர், மேற்கு ராமாபுரம்,கிழக்கு ராமாபுரம், வழிச்சோதனை பாளையம் உட்பட பல பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்பொழுது அவர் பேசியது:

பொதுமக்களின் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வீடுகளுக்கு இனி 150 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். முதியவர் உதவித் தொகை, திருமண உதவி திட்டம் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். திமுக. ஆட்சியில் கடும் மின்வெட்டு நிலவியது. அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியது.முதல்வர் பழனிசாமி ஆட்சியில் ஏராளமான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.நான் சாதி, மத பாகுபாடு பார்க்க மாட்டேன் உங்கள் பிரச்சினைகள் குறித்து சட்ட மன்றத்தில் பேச எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in