

வடலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலை வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார் என்று கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது:
கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதி களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (மார்ச்.2) மாலை 3 மணியளவில் வடலூர் பேருந்து நிலையம் அருகில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.
எனவே திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள் ளார்.