தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள - காவல் துறையினர் அஞ்சல் வாக்களிப்பு :

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள -  காவல் துறையினர் அஞ்சல் வாக்களிப்பு :
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல் துறையினர் நேற்று அஞ்சல் வாக்குகளை அளித்தனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பணியை ஆய்வு செய்த ஆட்சியர் ம.கோவிந்தராவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் காவல் துறையினர் அனைவரும் அஞ்சல் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாக்களித்து வருகின்றனர்.

மேலும், வாக்குச்சாவடியில் பணிபுரியவுள்ள ஆசிரியர்களுக்கு நடைபெற்ற 2-ம் கட்ட பயிற்சி வகுப்பின்போது, அஞ்சல் வாக்களிப்பதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன. அவற்றில், 8,308 அஞ்சல் வாக்குகள் பதிவாகின. மேலும், பயிற்சி வகுப்பில் பங்கேற்காதவர்களின் முகவரிக்கு அஞ்சல் வாக்களிக்கும் படிவங்கள் அனுப்பப்பட்டு, அதில் 75 அஞ்சல் வாக்குகள் வரப்பெற்றுள்ளன. இதன்படி, வாக்குச்சாவடி அலுவலர்கள் 8,383 பேரின் அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

முன்னதாக, கடந்த 2 நாட்களாக 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 2,430 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதன்படி, மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 10,813 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து, அஞ்சல் வாக்குகள் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

காவலர்கள் அஞ்சல் வாக்களிக்கும் நிகழ்வை எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உடனிருந்து ஆய்வு செய்தார்.

முதன்முறையாக...

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத் தில் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூரில் தலா ஒரு பத்திரிகையாளர் நேற்று தங்களின் அஞ்சல் வாக்குகளை பதிவு செய் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in