

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுப்படி 19 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரவாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.
அனைத்து விடுதிகளிலும் அவ்வப்போது சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி நகர டிஎஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான தனிப்படையினர்
தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பாலதண்டாயுத நகரை சேர்ந்த அஜய் மாடசாமி (40), லெட்சுமணன் மகன் சண்முக விக்னேஷ் (24), தமிழரசன் மகன் ஜெயந்திரன் (21), ராஜகோபால் நகரை சேர்ந்த வேல்சாமி மகன் பூங்குமார் (21), முத்துபாண்டி மகன் முத்துராஜா (23), தாளமுத்துநகரை சேர்ந்த முத்துபாண்டி மகன் ரமேஷ் என்ற கண்ணன் (16) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 அரிவாள், 2 கத்தி ஆகிய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற் பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வி.கோவில்பத்து பகுதியை சேர்ந்த சந்தானம் மகன்கள் கணேசன் (23), சந்தனராஜ் (20),தேஞ்சான்சோலை பகுதியை சேர்ந்த அங்கப்பன் மகன்மருதுபாண்டி (21), தென்திருப் பேரை மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வன் மகன் பெனிஸ்சிங் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.