

தூத்துக்குடி மட்டக்கடை சொர்ணவிநாயகர் ஆலயத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை சிவாச்சாரியர்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் வஉசி கல்விக் குழு செயலாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், வஉசி கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.