செலவின பார்வையாளர்களுக்கு தொகுதிகள் மறு ஒதுக்கீடு :

செலவின பார்வையாளர்களுக்கு தொகுதிகள் மறு ஒதுக்கீடு :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர்கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் 3 தேர்தல் செலவின பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்திருந்தது.

இந்நிலையில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்த செலவின பார்வையாளர் ராகேஷ்தீபக் தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கான தொகுதிகள் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக குண்டன் யாதவ் செயல்படுவார். அவரை 9489947507 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். அதுபோல ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக சுரேந்திர குமார்மிஸ்ரா செயல்படுவார். அவரை9489947509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in