Regional03
பெண்ணைக் கொன்ற வழக்கில் : விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை :
கடலாடி அருகே உள்ள மாரந்தை கிராமத்தில் 13.12.2012 அன்று இரு தரப்பினர் இடையே வயல்வெளியில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கல் வீசித் தாக்கினர். இதில் அந்த வழியே சென்ற ரவி மனைவி மாரியம்மாள்(40) தலையில் கல் பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக மாரந்தையைச் சேர்ந்த திருநாவுக்கரசு, விவசாயி வேலாயுதம்(47) உட்பட 10 பேர் மீது இளஞ்செம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் வேலாயுதத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், திருநாவுக்கரசு உட்பட 9 பேரை விடுதலை செய்தும் மாவட்ட மகிளா நீதிபதி சுபத்ரா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
