

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள தேரியூர்பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி மகன் சரத்குமார் (27). அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 11.03.2021 அன்று இவரை குலசேகரன்பட்டினம் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் சரத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். ஆட்சியர் கி. செந்தில் ராஜ் உத்தரவின்பேரில் சரத்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.