‘சி-விஜில் செயலியில் தேர்தல் புகார் தெரிவிக்க அழைப்பு’ :

‘சி-விஜில் செயலியில் தேர்தல் புகார் தெரிவிக்க அழைப்பு’ :
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை ‘சி-விஜில்’ செயலியில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

உதகை ஹெச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் ‘சி-விஜில்’ செயலி குறித்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் விசால் எம்.சனப், அமர்சிங் நெஹரா, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் பூங்கா பணியாளர்களுடன் வரிசையில் நின்று, தேர்தல் தொடர்பான புகார்களை ‘சி-விஜில்’ செயலியில் தெரியப்படுத்துங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன்பின்பு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது ‘‘கடந்த தேர்தலின்போது குறைவான வாக்குகள் பதிவாகியுள்ள பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சி-விஜில் செயலி குறித்தும், அதில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கும் விதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது’’ என்றார்.

தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ், உதவி திட்ட அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ஜெயராணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in