

புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் கீரப்பாளையம் ஒன்றிய பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புவனகிரி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று சுவாமி கும்பிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் கூளப்பாடி, கூ.தொன்பாதி, தெற்கு விருதாங்கன், பரிபூரணநத்தம், வெய்யலூர், வடபாக்கம், வெள்ளியக்குடி, ஓடாக்கநல்லூர், வடபாக்கம் உள்ளிட்ட 15- க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் பேசியதாவது:
திமுகவினர் எப்போதும் பெண்களை அவமதித்து பேசுவது தான் வழக்கம். 10 ஆண்டுகளாக சும்மா இருந்த ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க பொய் பேசி வருகிறார். திமுகஆட்சி என்றுமே மக்கள் விரோத ஆட்சி தான். முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு வாஷிங்மெஷின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. வெற்றி பெற்று ஆட்சி வந்தவுடன் அனைத்தும் மக்களுக்கு கிடைக்கும். அதிமுக அரசு என்றும் நல அரசு ஆகும். எனவே பழனிசாமி முதல்வராக என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்தார்.