சிதம்பரத்தில் மரம் இழைப்பகத்தில் தீ விபத்து : ரூ. 40 லட்சம் பொருட்கள் எரிந்து சாம்பல்

சிதம்பரத்தில் தீ விபத்து ஏற்பட்ட மரம் இழைப்பகம்.
சிதம்பரத்தில் தீ விபத்து ஏற்பட்ட மரம் இழைப்பகம்.
Updated on
1 min read

சிதம்பரம் மந்தக்கரை பகுதியில் சக்கரபாணி, ராமு ஆகியோருக்கு சொந்தமான மரம் இழைப்பகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென மரம் இழைப்பகம் தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் தீ பரவி இழைப்பகத்தில் இருந்த மர சாமான்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. மரவேலைப்பாடுகளுக்கு வைத்திருந்த இயந்திரமும் எரிந்து நாசமானது. தகவலின் பேரில் சிதம்பரம் தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த தீவிபத்தில் மர பலகைகள், மர சாமான்கள், மெஷின் உள்ளிட்ட ரூ 40 லட்சம் பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின் மின்கசிவு காரணம் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in