

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதில் நேற்று முன் தினம் வரை 16 பள்ளிகள், 5 கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என 256 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களில் 130 பேர் குணமடைந்து, வீடு திரும்பி விட்டனர்.
இந்நிலையில், செங்கிப்பட்டி அருகேயுள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் 15 மாணவிகளுக்கு நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் பயிலும் மேலும் 9 மாணவிகளுக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனும திக்கப்பட்டுள்ளனர்.