முதுகுளத்தூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் பிரச்சாரம் :

கமுதி பகுதியில் வாக்கு சேகரித்த முதுகுளத்தூர் அமமுக வேட்பாளர் முருகன்.
கமுதி பகுதியில் வாக்கு சேகரித்த முதுகுளத்தூர் அமமுக வேட்பாளர் முருகன்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் பசும்பொன், கடமங்குளம், மருதங்கநல்லூர், உலகநடை, பாக்குவெட்டி, பேரையூர் உள்ளிட்ட 25 கிராமங்களில் அமமுக வேட்பாளர் முருகன் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2011-2016 வரை முதுகுளத்தூர் எம்எல்ஏவாக நான் இருந்தபோது இப்பகுதியில் இரண்டு அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன.

மீனவர்களுக்காக வாலி நோக்கம், முந்தல், ரோச்மாநகர், மாரியூர் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் மீன்பிடித்தளம் அமைக்கப்பட்டுள்ளன.

என்னை வெற்றிபெறச் செய்தால் இந்த தொகுதிக்கு அரசு பொறியியல் கல்லூரி கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in