

ஈரோடு மாவட்டத்தில் 304 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப் பட்டுள்ளதாக தேர்தல் பார்வை யாளர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடந்த கூட்டத் தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டப்பேரவைத் தொகுதி களின் தேர்தல் பொதுப்பார்வை யாளர்கள், காவல் பார்வை யாளர், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் பொது பார்வை யாளர்கள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் 20, ஈரோடு மேற்குதொகுதியில் 39, மொடக்குறிச்சியில் 31, பெருந்துறையில் 67, பவானியில் 28, அந்தியூரில்34, கோபியில் 66, பவானிசாகர் தொகுதியில் 19 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 304வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப் பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலக இலவச தொலைபேசி எண் 18004257024 மற்றும் 1950 அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்.0424-2257901, 2256782, 2251863 மற்றும் 2256524 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில் எஸ்பி தங்கதுரை, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.