காசவளநாடு கோவிலூரில் பங்குனி உத்திர பெருவிழா - 18 கிராமத்தினர் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் :

தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு கோவிலூர் ஜெம்புகேஸ்வரர் கோயிலுக்கு நேற்று காவடி, பால்குடம் எடுத்துச் செல்லும் பக்தர்கள்.
தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு கோவிலூர் ஜெம்புகேஸ்வரர் கோயிலுக்கு நேற்று காவடி, பால்குடம் எடுத்துச் செல்லும் பக்தர்கள்.
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவி லூர் கிராமத்தில் உள்ள அகிலாண் டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் நேற்று பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி, 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் உள்ள ஜெம்பு கேஸ்வரர்-அகிலாண் டேஸ்வரி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர பெருவிழா 10 நாட்கள் சிறப் பாக கொண்டாடப்படும்.

அதன்படி, நிகழாண்டு பங் குனி உத்திர பெருவிழா மார்ச் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்லும் நிகழச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, பங்குனி உத்திரத்தை யொட்டி, நேற்று மூலவர் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றன.

மேலும், தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் இடும்பன், முருகன் சன்னதியில் ஏராளமானோர் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை காசவள நாட்டில் உள்ளடங்கிய 18 கிரா மங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத் தினர். இந்த விழாவையொட்டி, கோவிலூரில் பல்வேறு கிராமத் தினர் பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங் கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in