திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலங்குளத்தில் நாளை பிரச்சாரம் :

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆலங்குளத்தில் நாளை பிரச்சாரம் :
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலங்குளத்தில் நாளை (30-ம் தேதி) மாலை பிரச்சாரம் செய்கிறார்.

குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு ஆலங்குளத்துக்கு வரும் மு.க.ஸ்டாலின் ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா, தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி, கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர், வாசுதேவநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா ஆகியோருக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறார். பின்னர், ராஜபாளையம் செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in