

கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் நேற்று 42.70 அடியானது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக வலது மற்றும் இடதுபுறக்கால்வாய் வழியாக விநாடிக்கு 149 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
நீர்வரத்து இல்லாத நிலையில், அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று அணை நீர்மட்டம் 42.70 அடியானது.