கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு - தடுப்பூசி போட்டதாக குறுந்தகவல் வந்தது எவ்வாறு? : விழுப்புரம் சுகாதாரத்துறையினர் விளக்கம்

கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு -  தடுப்பூசி போட்டதாக குறுந்தகவல் வந்தது எவ்வாறு? :  விழுப்புரம் சுகாதாரத்துறையினர் விளக்கம்
Updated on
1 min read

கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட்டதாக குறுந்தகவல் வந்தது குறித்து விழுப்புரம் சுகாதாரத் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை சார்பாக, 'கரோனா' தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

இதில் மருத்துவப்பணியாளர்கள், ஊரக வளர்ச்சித்துறையினர், வரு வாய்துறையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள்,பணியாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அவர்களின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்தது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தங்கள் பகுதி வட்டார சுகாதார மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, "முன் களப்பணியாளர்களின் பட்டியலை சுகாதாரத்துறை கடந்த ஜனவரி மாதம் சேகரித்தது. அதன்பின் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கிடையே பணி மாறுதலில் சென்றவர்கள், தாங்கள் பயன்படுத்திய அலுவலக மொபைல் எண்ணை தங்கள் இடத்திற்கு வந்தவரிடம் அளித்துவிட்டு சென்றுவிட்டனர். அப்படி சென்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், தற்போது அந்த மொபைல் எண்ணைபயன்படுத்துவருக்கு எஸ்எம்எஸ்வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள் ளும் முன் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தங்களிடம் உள்ளதா என கவனிக்க வேண்டும். தற்போது உள்ள மொபைல் எண்ணை கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் ஆதார் கார்டை காட்டி எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள்,பணியாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அவர்களின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in