

உளுந்தூர்பேட்டை தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் தொடர தனக்கு மீண்டும் வாக்களிக்குமாறு அதிமுக வேட்பாளர் ரா.குமரகுரு கேட்டுக் கொண்டார்.
உளுந்தூர்பேட்டை தொகுதி யில் மீண்டும் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ரா.குமரகுரு நேற்று திருநாவலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசியது:
தொகுதியில் பல்வேறு குக்கிராமங்களிலும் சாலை வசதி மேம் படுத்தப்பட்டுள்ளது.
ஏரிகள் தூர்வாரப்பட்டு நிலத் தடி நீர் உயர்த்தப்பட்டுள்ளது. தொகுதியில் மருத்துவமனை தரம் உயர்த்துதல், பாதாள சாக்கடைத் திட்டம், நீதிமன்றக் கட்டிடம், அரசு பெண்கள் பள்ளிக் கட்டிடம் என பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சிப் பணிகள் தொடர மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். வேட்பாளர் குமரகுரு அங்குள்ள மசூதிகளில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.