

போச்சம்பள்ளி அடுத்த சுண்டகாப் பட்டி கிராமத்தில் கந்தர்மலை வேல்முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று (28-ம் தேதி) நடக்கவுள்ளது.
இதையொட்டி, நேற்று காலை தென்பெண்ணையாற்றில் புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆவத்தவாடி, சுண்டாகப்பட்டி, மோட்டூர், கரகூர், கரியகவுண்டனூர் கிராமங்களைச் சேர்ந்த 300 பெண்கள் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று காலை கும்பாபிஷேக விழா நடக்கிறது.